வாழப்பாடியில் கொரோனா தடுப்பு பணி: தனித்துணை கலெக்டர் ஆலோசனை
தனித்துணை கலெக்டர் ஆலோசனை
வாழப்பாடி:
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வாழப்பாடியில் தனித்துணை கலெக்டர் கோவிந்தன், டாக்டர்கள், கிராம உதவியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது வீடுகள்தோறும் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்பு வாழப்பாடி புதுப்பாளையம், அண்ணாநகர் தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடந்த தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமையில் உள்ளனரா? வீடுகள்தோறும் தடுப்பூசி போட்டவர்கள் எத்தனை பேர்? போடாதவர்கள் எத்தனை பேர்? என கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. பணிகள் முடிந்ததும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெறும் என்றார்.
Related Tags :
Next Story