ஓமலூர் பகுதியில் முக கவசம் அணியாத 3,515 பேர் மீது வழக்கு
முக கவசம் அணியாத 3,515 பேர் மீது வழக்கு
ஓமலூர்:
ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஓமலூர் போலீஸ் சோமசுந்தரம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதன்படி முக கவசம் அணியாததற்காக ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 777 பேர் மீதும், தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் 636 பேர் மீதும், தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் 806 பேர் மீதும், தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் 420 பேர் மீதும், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் 446 பேர் மீதும், நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் 430 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 515 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 15 பேர் மீதும் வழங்கப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்ததாக 1,344 வழக்குகள் பகுதி செய்யப்பட்டதுடன், 428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story