18 முதல் 45 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
வீடுகளுக்கே சென்றுகொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடந்த 24-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் 8,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் 18 வயது முதல் 45 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் 1,300 பேர் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய வீடுகளுக்கே மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று 38 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போட்டப்பட்டது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 18 வயது முதல் 45 வயதுடைய பால் வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், மளிகை கடை, மருந்து கடை பணியாளர்கள், பத்திரிகை வினியோகிப்பவர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், மின்வாரிய, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இ-சேவை பணியாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆதார் அல்லது அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story