செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கருப்பு பூஞ்சை நோயால் டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்தார்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கருப்பு பூஞ்சை நோயால் டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 28 May 2021 12:01 PM IST (Updated: 28 May 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கருப்பு பூஞ்சை நோயால் டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் அச்சரப்பாக்கத்தை அடுத்த அமைந்தங்கருணையை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற புருஷோத்தமன் (வயது49). இவர் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ரமேஷுக்கு கொரோனா தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை நோய் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ரமேஷுக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.

Next Story