குண்டர் சட்டத்தில் கைது


குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 May 2021 5:16 PM IST (Updated: 28 May 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொங்கலூர்
பொங்கலூர் அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 
நகை பறிப்பு 
சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனபால் என்பவரது மகன் லோகநாதன்வயது 28. இவர் திருப்பூர் கருவம் பாளையத்தில் தங்கி திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26ந் தேதி பொங்கலூர் அருகே உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்த பாலாமணி 60 என்பவரது வீட்டிற்கு லோகநாதன் சென்றுள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரிடம் இந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். 
இதுகுறித்து அவர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1 ந் தேதி காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
குண்டர் சட்டத்தில் கைது
அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பாலாமணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட லோகநாதன் என்று தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அவினாசிபாளையம், மூலனூர், ஊத்துக்குளி, குன்னத்தூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி, காரமடை, சூலூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர். 
இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



Next Story