விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 28 May 2021 11:52 AM GMT (Updated: 28 May 2021 11:52 AM GMT)

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

காங்கேயம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் காங்கேயம் போலீசார் சார்பில் நேற்று காலை காங்கேயம் பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கேயம் போலீசார் சமூக இடைவெளியுடனும், முககவசம் அணிந்து கொண்டும் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் ஆடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

-

Next Story