வீடுகளுக்குள் வேகமாக பரவும் கொரோனா தாக்குதலில் இருந்து குடும்பத்தினரை பாதுகாப்பது எப்படி? சித்தா டாக்டர் அறிவுரை


வீடுகளுக்குள் வேகமாக பரவும் கொரோனா தாக்குதலில் இருந்து குடும்பத்தினரை பாதுகாப்பது எப்படி? சித்தா டாக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 28 May 2021 2:20 PM GMT (Updated: 28 May 2021 2:27 PM GMT)

வீடுகளுக்குள் வேகமாக பரவும் கொரோனா தாக்குதலில் இருந்து குடும்பத்தினரை பாதுகாப்பது எப்படி? சித்தா டாக்டர் அறிவுரை கூறியுள்ளார்.


தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருடைய குடும்பத்தில் மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வீடுகளுக்குள் வேகமாக பரவும் கொரோனாவிடம் இருந்து குடும்பத்தினரை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் சித்தா டாக்டர் சிராஜுதீனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஒரு குடும்பத்தில் ஒரு நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அக்குடும்பத்தில் 2-வது நபர் தொற்றினால் பாதிக்காதவாறு நடந்து கொள்வதே உண்மையான விழிப்புணர்வு ஆகும். குடும்பத்தில் ஒரு நபர் பாதிக்கப்பட்டு இருந்தால் 2-வது தொற்றாளர் கண்டிப்பாக அக்குடும்பத்தில் ஒரு நபராகவே இருக்கிறார். எனவே, குடும்பத்தில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் தோன்றினால் பாசத்தை ஒதுக்கி வைத்து விட்டு தனிமைப்படுத்தலை தொடங்க வேண்டும். காய்ச்சல் ஆரம்பித்த உடனேயாவது பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்திடல் வேண்டும். ஒருநாள் மட்டும் காய்ச்சல் ஏற்பட்டு, அதன் பாதிப்பு குறைந்தவுடன் தொற்றாளர் நலமாகி விட்டார் என எண்ணி ஏமாறாமல் அடுத்த 14 நாட்களும் தனிமைப்படுத்தலை தொடர்ந்திட வேண்டும். சிறிய வீடுகளில் வசிப்பவர்களாக இருப்பின் குறைந்தபட்சம் அனைவருமே வீடுகளுக்குள்ளும் நன்றாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வெளியிடங்களில் கொரோனா பரவும் விகிதத்தை விட வீடுகளுக்குள் கொரோனா பரவும் விகிதமே அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story