1823 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியாகினர்.
1,823 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. இது சற்று ஆறுதலை தரும் வகையில் இருந்து வருகிறது. இருப்பினும் பல மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு புதிய உச்சத்தை தினம் தினம் எட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 1823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
56 ஆயிரத்து 354ஆக உயர்வு
இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையும் மீறி வீட்டை விட்டு வெளியே வருகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 354ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 976 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
12 பேர் பலி
இதற்கிடையே கொரோனா பாதிப்பை போல் மாவட்டம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை 12 பேர் பலியாகினர். இதில் 7 பெண்கள், 5 ஆண்கள் அடங்குவர். மொத்த பலி எண்ணிக்கை 425 ஆக உள்ளது. ஏற்கனவே ஒரு வாரம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.
இந்த முழு ஊரடங்கிலும் கொரோனா தொற்று குறையவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு வாரம் வருகிற 7ந்தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஒரு வார முழு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
------
Related Tags :
Next Story