அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு திருமணம் செய்த ஜோடிகள்


அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு திருமணம் செய்த ஜோடிகள்
x
தினத்தந்தி 28 May 2021 9:00 PM IST (Updated: 28 May 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருவண்ணாமலை

கொரோனா ஊரடங்கு காரணமாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு திருமணம் செய்து கொள்கின்றனர். 

சாமி தரிசனம் செய்ய தடை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள பல மாதங்களுக்கு முன்பே சில ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர். 

இதற்கிடையே கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்ட ஜோடிகள் குறிப்பிட்ட சில உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

கோவில் முன்பு திருமணம்

இந்த நிலையில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த 3 திருமண ஜோடிகள் தங்களது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில ஜோடிகள் அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணத்திற்கு முன்பதிவு செய்யாததால் ராஜகோபுரத்தின் முன்பு மாலை மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். 

அதுமட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் இரட்டை பிள்ளையார் கோவில் முன்பு சில ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்.

Next Story