போளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


போளூர் அருகே  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 May 2021 9:00 PM IST (Updated: 28 May 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

போளூர்

போளூரை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தை விவசாயி ஒருவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு பிற்பகல் 2 மணிக்கு நிலத்திற்கு சென்றார். அங்கு நுங்கு வெட்டி சாப்பிட்டனர். பின்னர் மகள்கள் இருவரும் குளித்துவிட்டு வருவதாக பம்ப்செட்டிற்கு சென்றனர்.

அவர்களுடைய தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பக்கத்து நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (40) என்பவர் குளித்துக்கொண்டிருந்த 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் கூக்குரலை கேட்டு வேறு நிலத்தில் வேலை செய்த ஒருவர் ஓடிவந்தார். அவரை பார்த்ததும் அண்ணாதுரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சிறுமியின் தாய் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தார்.

Next Story