பரதராமி அருகே ஊருக்குள் நுழைய முயன்ற 15 யானைகள் கூட்டம்
பரதராமி அருகே ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 15 யானைகள், கூட்டமாக ஊருக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம்
யானைகள் கூட்டம்
ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் அடிக்கடி தமிழக எல்லைப் பகுதியான குடியாத்தம் வனப்பகுதியில் நுழைந்து விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருகிறது. கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை விரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆந்திர மாநில வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 15 யானைகள் அடங்கிய கூட்டம் குடியாத்தத்தை அடுத்த பரதராமி கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நுழைய முயன்றுள்ளது.
விரட்டியடிப்பு
அவற்றின் பிளிறல் சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் பரதராமி பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் பூபதி, நீலகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள், அப்பகுதி விவசாயிகள் என சுமார் 25 பேருடன் நேற்று அதிகாலை பட்டாசுகளை வெடித்தும் மேளங்களை அடித்தும் அந்த யானை கூட்டத்தை ஆந்திர மாநிலம் யாதமரி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story