திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூரில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம் - மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை


திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூரில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம் - மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 28 May 2021 9:27 PM IST (Updated: 28 May 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூரில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமடைந்து மகசூல் சூறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருக்கடையூர்,

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிங்கனோடை, கிடங்கல், மாமாகுடி, வேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ததை தொடர்ந்து குளம், குட்டைகள் நிலத்தடி நீர் உயர்ந்த நிலையில் தற்போது விவசாயிகள் மணல் திடல்களில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து பிள்ளைபெருமாநல்லூர் விவசாயி சுந்தரவடிவேல் கூறுகையில், நாங்கள் ஆண்டு தோறும் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரியான விலை கிடைக்காததால், குறைவாக பயிரிட்டு வந்தோம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததாலும் மேலும் பம்புசெட் மற்றும் ஆயில் என்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி இந்தமுறை அதிகமாக 250 ஏக்கரில் பயிரிட்டுள்ளோம்.

இது பயிரிட்டு 90 நாட்களில் அறுவடை செய்யப்படும். நிலக்கடலை சாகுபடியை பொறுத்தவரை விதைப்பு, களை எடுத்தல், மண் அணைத்தல், கடலையை பிரித்தல், உடைத்தல் என பல வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் விளைச்சல் அதிகமாகவும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பாத்திருந்தோம்.

ஆனால் அதிகமான வெயிலின் தாக்கத்தால், செடிகள் கருகின. பல காரணங்களால் போதிய மகசூல் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள், கவலை அடைந்துள்ளனர். எனவே உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்றார்.

Next Story