கொரோனா நிவாரண நிதி வழங்கிய சுகாதார அதிகாரிகள்


கொரோனா நிவாரண நிதி வழங்கிய சுகாதார அதிகாரிகள்
x
தினத்தந்தி 28 May 2021 10:01 PM IST (Updated: 28 May 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் தங்கள் 10 நாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினார்.

கொடைக்கானல்: 

கொரோனா சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பலர் நன்கொடை அளித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) சுப்பையா, சுகாதார ஆய்வாளர் பாண்டி செல்வம் ஆகியோர் தங்களது 10 நாள் சம்பள தொகையான ரூ.50 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்க அனுமதி கடிதத்தினை நகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்காக கொடுத்த நிலையில், கொடைக்கானல் நகராட்சி சுகாதார அதிகாரிகள் தங்களது 10 நாள் சம்பளத்தை வழங்கியதற்கு அனைவரும் பாராட்டினர்.


Next Story