பூம் பூம் மாடு தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள். போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
புதுப்பேட்டை அருகே பூம் பூம் மாடு வைத்து தொழில் செய்து வரும் குடும்பத்தினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரிசி மற்றும் காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார்.
ஜோலார்பேட்டை
பூம் பூம் மாடு தொழிலாளர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்த சில ஆண்டுகளாக பூம் பூம் மாடு வைத்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர்கள் வெளியே செல்ல முடியாமல் போதிய வருமானம் இன்றியும், வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பூம் பூம் மாடு வைத்து தொழில் செய்து வரும் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.
அரிசி, காய் கறிகள்
அப்போது அங்கு வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனது சொந்த செலவில் தலா 25 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை அரிசி மற்றும் காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி உடனிருந்தார்.
Related Tags :
Next Story