நாட்டறம்பள்ளி அருகே காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை


நாட்டறம்பள்ளி அருகே காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 28 May 2021 10:25 PM IST (Updated: 28 May 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நாட்டறம்பள்ளி

குடிநீர் வழங்கவில்லை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். ஊராட்சி மன்றம்சார்பில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வெலக்கல்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

காலி குடங்களுடன் முற்றுகை

அங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தரையில்  அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story