தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்


தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
x
தினத்தந்தி 28 May 2021 10:28 PM IST (Updated: 28 May 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 300 பேர் தினமும் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 36 வார்டுகளுக்கு வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரிப்பது, நகரை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கையுறைகளை வழங்கினார். 

மேலும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 300 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story