உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்-சிறுமிகள்


உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்-சிறுமிகள்
x
தினத்தந்தி 28 May 2021 10:28 PM IST (Updated: 28 May 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

உண்டியலில் சேமித்த பணத்தை சிறுவர்-சிறுமிகள் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

ஊட்டி,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தன்னார்வலர்கள், பொதுமக்கள் தாமாக முன்வந்து தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு 3 சிறுவர்கள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். 

கலெக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். குன்னூர் அருகே அருவங்காடு பகுதியை சேர்ந்த கவுசித் (வயது 12), ஊட்டி மிஷனரிஹில் பகுதியை சேர்ந்த தர்ஷித் (13) கேரம் விளையாட்டு பொருள் வாங்குவதற்காக சேமித்து வைத்த பணம், பெர்ன்ஹில் நியூ லைன் பகுதியை சேர்ந்த கார்மல் கீர்த்திகா (5) சைக்கிள் வாங்குவதற்காக சிறு வயது முதலே சேமித்து வந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கினர். 

ஊட்டி எல்க்ஹில் குமரன் நகர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் மதன் தான் சேமித்து வைத்த ரூ.859- ஐ நிவாரண நிதிக்காக வழங்கினான். நீலகிரியில் சிறுவர், சிறுமிகள் தாமாக முன்வந்து நிவாரண நிதி வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story