மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன


மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன
x
தினத்தந்தி 28 May 2021 10:38 PM IST (Updated: 28 May 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் 10 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக அதிக பாதிப்பு கண்டறியப்படும் கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள சாலைகள் அடைக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி காந்திகண்டி புதூர், அண்ணா நகர், எமரால்டு, பேலிதளா உள்பட 10 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. மேலும் அந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு உள்ளது. இது தவிர கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Next Story