தைல மரக்காட்டில் தீ


தைல மரக்காட்டில் தீ
x
தினத்தந்தி 28 May 2021 10:43 PM IST (Updated: 28 May 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

தைலமரக்காட்டில் தீப்பிடித்தது.

கறம்பக்குடி, மே.29-
கறம்பக்குடி அருகே உள்ள தொம்பரம்பட்டியில் அய்யப்பன் (வயது 45) என்பவருக்கு சொந்தமான தைலமரக்காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக உயர் அழுத்தமின் வயர் செல்கிறது. நேற்று காலை அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் மின்வயர் அறுந்து விழுந்தது. இதனால் தைலமரக்காட்டில் தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த மரங்களிலும் பற்றி  எரிந்தது. இதனால் அப்பகுதியே புகைமூட்டமானது. இதுகுறித்து அப்பகுதியினர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுருளிராஜன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ½ ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசமானது.

Next Story