போலீசார் தீவிர கண்காணிப்பு


போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 28 May 2021 5:30 PM GMT (Updated: 28 May 2021 5:30 PM GMT)

முழு ஊரடங்கை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ராமேசுவரம், 
கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறை மூலம் ட்ரோன் பறக்க விடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் ராமேசுவரத்தில் திட்டக்குடி சந்திப்பு சாலை பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து பஸ் நிலையம், கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ராமேசுவரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஊரடங்கை ட்ரோன் தீவிரமாக கண்காணித்தனர்.

Next Story