285 பேருக்கு கொரோனா
285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 285 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 15 ஆயிரத்து 869 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 259 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 151 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 205 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 91 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.
Related Tags :
Next Story