டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க நேர்முகத்தேர்வு


டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க நேர்முகத்தேர்வு
x
தினத்தந்தி 28 May 2021 5:49 PM GMT (Updated: 28 May 2021 5:49 PM GMT)

கொரோனா தடுப்பு தற்காலிக பணிக்கு டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்;
கொரோனா தடுப்பு தற்காலிக பணிக்கு டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
நேர்முகத்தேர்வு
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் தற்காலிமாக டாக்டர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க அரசு முடிவெடுத்தது.
அதன்படி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் பணியாற்ற டாக்டர், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. 
பணி நியமன ஆணை
இந்த பணிக்கு விண்ணப்பிக்க சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ஒவ்வொரு பதவிக்கு தனித்தனி பகுதியில் பாதுகாப்பு வசதிகளுடன் நேர்முக தேர்வு நடந்தது.
தேர்வை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) உமா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களுக்கு வாசலில் கிருமிநாசினி வழங்கப்பட்டது, மேலும் சமூக இடைவெளியில் நேர்முக தேர்வு காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்வில் தகுதியுடையவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.  

Next Story