ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம்


ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 28 May 2021 11:42 PM IST (Updated: 28 May 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம்

கோவை
ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க போலீசார் அறிவுறுத்தினர்.

மாநிலத்தில் முதலிடம்

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. எனவே தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் சாலைகளில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.

 மேலும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி விசாரித்து கொரோனா பரவல் குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

அபராதம்

ஆனால் அதையும் மீறி சிலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதனால் வாகனங்களில் சுற்றுபவர்களுக்கும், அவர்களால் மற்றவர்க ளுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியில் நேற்று அதிகாலை முதல் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதையடுத்து அங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 


அப்போது மருத்துவ காரணங்களுக்காக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

உறுதிமொழி எடுத்தனர்

இதையடுத்து அவர்களை போலீசார் சமூக இடைவெளியோடு நிற்க வைத்து கொரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினர். 

அதன்படி அவர்கள் தங்களின் கைகளை நேராக நீட்டி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது, அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்ற மாட்டோம். 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீட்டிற்குள் இருப்போம். அத்தியாவசிய தேவைக ளுக்கு வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிப் போம். 

முகக்கவசம் அணிவோம். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story