2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை


2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 May 2021 11:59 PM IST (Updated: 28 May 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை

சரவணம்பட்டி

கோவையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அச்சம் காரணமாக 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது 

கூலி தொழிலாளியின் மனைவி

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோட்டைப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மற்றும் அவரது 32 வயது மனைவி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அங்குள்ள தனியார் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 26-ந் தேதி வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை

மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனக்கு மீண்டும் கொரோனா வந்து விட்டதோ? என பயத்தில் இருந்த அந்த பெண், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு பெண்

இதேபோல் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் கணவருக்கு அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதியானதால் அவர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மனைவிக்கு அறிகுறி இல்லை என்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். 

இதனிடையே கொரோனா தொற்று உறுதியான உறவினர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது அந்த பெண்ணின் மனதில் பெரும் பாதிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story