ஓசூர் பகுதியில், ஊரடங்கால் விலை கிடைக்காமல் தோட்டங்களில் வீணாகும் செர்ரி தக்காளிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை


ஓசூர் பகுதியில், ஊரடங்கால் விலை கிடைக்காமல் தோட்டங்களில் வீணாகும் செர்ரி தக்காளிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2021 6:30 PM GMT (Updated: 28 May 2021 6:30 PM GMT)

ஓசூர் பகுதியில், ஊரடங்கால் விலை கிடைக்காமல் தோட்டங்களில் வீணாகும் செர்ரி தக்காளிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை

ஓசூர்:
ஓசூர் பகுதியில் கொரோனா ஊரடங்கால் உரிய விலை கிடைக்காமல் தோட்டங்களில் செர்ரி தக்காளிகள் வீணாகி வருகிறது. 
10 டன் சாகுபடி
ஓசூர் அருகே சித்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் செர்ரி வகை தக்காளிகளை சாகுபடி செய்து வருகின்றனர். செர்ரி வகை தக்காளி வழக்கமான தக்காளியை விட அளவில் சிறியதாகவும், அடர் சிவப்பு நிறத்தில் செர்ரி பழம் போல் இருக்கும். இதில் இனிப்பு சுவை அதிகமாகவும், புளிப்பு சுவை குறைவாகவும் இருக்கும். இதனை ஒரு ஹெக்டேரில் 10 டன் சாகுபடி செய்ய முடியும். செர்ரி தக்காளி அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை சாஸ், கெச்சப், உணவு வகைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் செர்ரி தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து செர்ரி வகை தக்காளி விவசாயிகள் கூறியதாவது:- 
கோரிக்கை
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு செர்ரி வகை தக்காளியை கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி சென்றதால் ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வெளிநாட்டிற்கான ஏற்றுமதி தடை உள்ளிட்ட காரணங்களால் செர்ரி வகை தக்காளியை விற்க முடியாததால், அவற்றை பறிக்காமலேயே தோட்டங்களில் வீணாகி வருகிறது. ஒரு ஆண்டிற்கு மேலாக நஷ்டத்தை சந்தித்து வரும் செர்ரி தக்காளி சாகுபடி செய்யும் எங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிேறாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
========

Next Story