மாவட்டத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலி; புதிதாக 1,287 பேருக்கு தொற்று


மாவட்டத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலி; புதிதாக 1,287 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 29 May 2021 12:09 AM IST (Updated: 29 May 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,287 பேருக்கு தொற்று உறுதியானது.

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,287 பேருக்கு தொற்று உறுதியானது.

புதிதாக 1,287 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மட்டும் 1,287 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53,854 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 10,835 பேர் உள்ளனர். 1,481 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 42,494 ஆகும்.

18 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சிகிச்சை பெற்ற 18 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 8 பேர் பெண்கள், 10 பேர் ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் 38 வயதுக்கு மேல் 85 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்தது.

456 படுக்கைகள் காலி

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 76, சாதாரண படுக்கைகள் 368 மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 12 படுக்கைகள் என மொத்தம் 456 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story