வால்பாறையில் விதிமுறையை மீறி செயல்பட்ட கடைக்கு சீல்


வால்பாறையில் விதிமுறையை மீறி செயல்பட்ட கடைக்கு சீல்
x
தினத்தந்தி 29 May 2021 12:23 AM IST (Updated: 29 May 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் விதிமுறையை மீறி செயல்பட்ட கடைக்கு சீல்

வால்பாறை

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி இல்லை. 

இதனால் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது நகர் பகுதியில் ஒரு கடையின்  ஷட்டர் பாதி திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதை பார்த்ததும் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். 

மேலும் இதுபோன்று விதிகளை மீறி செயல்பட்டால் கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளனர். 


Next Story