மலைப்பாம்பு பிடிபட்டது
தளவாய்புரம் அருகே மலைப்பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே முகவூர் தொண்டைமான் குளம் கண்மாயில் இதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 50) என்பவர் மீன் பிடிக்க வலை வீசி விட்டு சென்று விட்டார். நேற்று காலை 7 மணிக்கு இவர் இந்த வலையை வந்து பார்த்தபோது அதில் ஒரு மலைப்பாம்பு சிக்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கும், சேத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன உயிரின காப்பாளர் ஆனந்த் உத்தரவுப்படி, சேத்தூர் வனச்சரக அலுவலர் கதிர்காமன், வனவர் கார்த்திக்ராஜா, வனக்காவலர்கள் பாரதிராஜா, செங்கோல் செல்வம் ஆகியோர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று வளையில் சிக்கியிருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டனர். பின்னர் சாஸ்தா கோவில் வனப்பகுதியில் இந்த பாம்பு விடப்பட்டது.
Related Tags :
Next Story