350 பேருக்கு கொரோனா தடுப்பூசி


350 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 May 2021 12:31 AM IST (Updated: 29 May 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்ைடயில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஆணையாளர் முகமது சாகுல் ஹமீது உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி, ஐயப்பன், சரத்பாபு ஆகியோர் கொண்ட குழு கடந்த சில தினங்களாக தினமும் ஒவ்வொரு வார்டுகளில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நகராட்சி சார்பில் முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணியை ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் 350-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுகுறித்து இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், நேற்றுவரை அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஏனைய வார்டுகளில் முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்படும் என கூறினார். முகாமில் முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி உடனிருந்தனர்.

Next Story