சிகிச்சைக்காக சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் வந்த வாலிபர்


சிகிச்சைக்காக சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் வந்த வாலிபர்
x
தினத்தந்தி 29 May 2021 12:33 AM IST (Updated: 29 May 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சைக்காக ஒரு வாலிபர் ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்தார்.


செம்பட்டு, 
புதுக்கோட்டை மணல்மேல்குடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30). இவர் சிங்கப்பூரில் வேலை செய்துவந்தார். அங்கு அவர் திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்  தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story