வாலிபர் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
வாலிபர் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 22). இவர் கடந்த 6-ந் தேதி நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு எதிரே உள்ள மைதான பகுதியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த சாலமோன் சாம் பிரபாகர் (26), மகேஷ் பிரேம்குமார் (27), ஜான்சன் (27), நவீன் (20) ஆகிய 4 பேரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த நிலையில் சாலமோன் சாம் பிரபாகர் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன், போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபுவுக்கு பரிந்துரை செய்தார். அதை அவர் ஏற்று, சாலமோன் சாம் பிரபாகர் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.
உடனே போலீசார், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, சிறையில் உள்ள அவர்களிடம் காண்பித்து, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story