கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி ஒரே நாளில் 479 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி ஒரே நாளில் 479 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். ஒரே நாளில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 41 வயது பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அதே போல 57 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து 1,230 பேர் வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்து 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 25 ஆயிரத்து 70 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 37 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
=========
Related Tags :
Next Story