40 மதுபாட்டில்கள் பறிமுதல்


40 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 May 2021 12:43 AM IST (Updated: 29 May 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணன் கோவில் தனியார் பார் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் விற்பனைக்காக 40 மதுபாட்டில்கள் வைத்திருந்ததும், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த முனியாண்டி (வயது 41) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்த கிருஷ்ணன்கோவில் போலீசார், முனியாண்டியை கைது செய்தனர். 

Next Story