சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை வேங்கைபட்டியில் கடந்த 2010-ம் ஆண்டு சமத்துவப்புர வீடுகள் கட்டப்பட்டன. 10 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் சமத்துவப்புர கட்டிடங்களை நேரில் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறும் போது, கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சமத்துவப்புர கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் திறக்கப்படவில்ைல. அந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேலு, பொறியாளர் செல்லையா சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.