கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 May 2021 1:03 AM IST (Updated: 29 May 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி பஞ்சாயத்து தலைவர் மருதுராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இந்தநிலையில் என்.ஜி.ஓ.காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், சத்திர ரெட்டியப்பட்டி, கே.உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story