தென்காசியில் வெள்ளத்தில் சேதம் அடைந்த பாலத்தை அதிகாரிகள் ஆய்வு
தென்காசியில் வெள்ளத்தில் சேதம் அடைந்த பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்காசி:
தென்காசியில் வெள்ளத்தில் சேதம் அடைந்த பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெள்ளத்தில் பாலம் சேதம்
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தென்காசி- இலஞ்சி ரோடு மின்வாரிய துணை மின் நிலையம் அருகில் சிற்றாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் சேதமடைந்தது.
அங்கு கான்கிரீட் அமைப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் ஆகும்.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து சேதமடைந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (ஊரக சாலை திட்டம்) சுந்தரம் தலைைமயிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள், இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story