பாவூர்சத்திரத்தில் ஊரடங்கை மீறி திறப்பு: 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்


பாவூர்சத்திரத்தில் ஊரடங்கை மீறி திறப்பு:  2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 29 May 2021 1:13 AM IST (Updated: 29 May 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாவூர்சத்திரம்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாவூர்சத்திரம் வி.ஏ.நகர் பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி 2 மளிகை கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த 2 கடைகளுக்கும் சென்று தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பாவூர்சத்திரம் பகுதியில் இதுபோல் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story