நீதிபதி - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று


நீதிபதி - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 29 May 2021 1:18 AM IST (Updated: 29 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் நீதிபதி மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்:

நீதிபதிக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 48 வயது பெண் நீதிபதி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய கணவர், மூத்த மகன் மற்றும் நீதிபதியின் தம்பி மனைவி ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தைக்கு சிகிச்சை
நீதிபதியின் தந்தை ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் நீதிபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story