போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த ஆசிரியரை கொன்றது ஏன் பரபரப்பு வாக்குமூலம்


போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த  ஆசிரியரை கொன்றது ஏன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 May 2021 1:24 AM IST (Updated: 29 May 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த ஆசிரியர் கொல்லப்பட்டது ஏன் என்பது தொடர்பாக கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மதுரை,மே.
மதுரையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த ஆசிரியர் கொல்லப்பட்டது ஏன் என்பது தொடர்பாக கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
போதை மறுவாழ்வு மையம்
அரியலூா் மாவட்டம் செந்துறையைச் சோ்ந்தவா் மணிவாசகம். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவா் போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக மதுரை ஒத்தக்கடை அருகே தனியாா் சார்பில் நடத்தப்படும் போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்த மையத்தில் அவருடன் 86 போ் சிகிச்சை பெற்று வந்தனா். 
இந்தநிலையில் இங்கு சிகிச்சை பெற்றுவந்த சிலருக்கும், மணிவாசகத்துக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வயிற்றில் கூா்மையான ஆயுதம் மூலம் வெட்டப்பட்ட நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் மணிவாசகம் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அங்கிருந்தவா்கள் இதுகுறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட மணிவாசகத்தின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். 
6 பேர் கைது
இதிதொடர்பாக போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி இருந்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பெரோஸ்கான் (35), கொடைக்கானலை சேர்ந்த பீட்டர் கோபிநாத் (30), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாலமுருகன் (45), ரவி (50), பாஸ்கர் (60), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து மணிவாசகத்தை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களில் 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்
விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலையாளிகள் 6 பேரும் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு நோய் குணமான போதிலும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் போதை மறுவாழ்வு மைய நிர்வாகம், அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே வெறுப்புடன் இங்கு தங்கி இருந்தார்கள். மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து எப்படியாவது வெளியே சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டங்களாக யோசித்து வந்தனர்.
இங்கிருந்து பல முறை அவர்கள் தப்பிக்க முயற்சி செய்த போது, மணிவாசகம் அவர்களை பற்றி நிர்வாகியிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்து விடுவாராம். இதன் காரணமாக வெளியே தப்பி செல்ல முடியாமல் இருந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் மணிவாசகத்தை கொலை செய்தாவது அங்கிருந்து தப்பித்து விடலாம் என திட்டமிட்டு, அவரை ெகாடூரமாக தாக்கி கொன்றுள்ளனர்.
இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story