காரைக்குடி,
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே கிருமி நாசினி தெளித்தல், வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தல், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைகள் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது அனைத்து பகுதியிலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கி தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் சாக்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப், ஊராட்சி செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.