கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிய மின்வாரிய டிரைவர்


கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிய மின்வாரிய டிரைவர்
x
தினத்தந்தி 29 May 2021 2:44 AM IST (Updated: 29 May 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதிக்கு மின்வாரிய டிரைவர் ரூ.30 ஆயிரம் வழங்கினார்

கரூர்
 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பேரில், பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்தவகையில் கரூர் மாவட்டம், அய்யர்மலை மின்வாரிய அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றும் கேசவன் தனது ஊதியத்தில் இருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை கரூர் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் செந்தில்ராஜனிடம் வழங்கினார். அவரின் இந்த மனித நேய செயலை அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டினர்.


Next Story