மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினர்
கரூர்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 510 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 184 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி 8 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 3,203 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story