மாவட்ட செய்திகள்

நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையம்- அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார் + "||" + corona center

நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையம்- அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார்

நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையம்- அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார்
நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார்.
நம்பியூர்
நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார். 
சிகிச்சை மையம் 
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கான தனி சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் 120 படுக்கை மற்றும் 15 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. புதிய சிகிச்சை மையத்தின் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். நம்பியூர் தாசில்தார் அமுதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மொழி, ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.வி. சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், ஈரோடு மேற்கு மாவட்டக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் என்.எஸ். சிவராஜ், நம்பியூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மெடிக்கல் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
தடுப்பூசி
அதன்பின்னர் டாக்டர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கலந்துரையாடினார்.  மேலும் நம்பியூரில் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும். அனைத்து பகுதி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை விரைவாக போடவேண்டும். சிகிச்சை மையத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்படும் என்று டாக்டர்களிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நம்பியூர் சமூக நலத்திட்ட தாசில்தார் வெங்கடேஸ்வரன், தி.மு.க. நிர்வாகிகள் என்.சி. சண்முகம், ஆனந்த்குமார், செல்வராஜ், மணி, கீதா முரளி, வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜவகர், சதீஷ், மனோகர் உள்பட கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார்.
2. காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
3. ஆனைமலை தாலுகாவில் பாதிப்பு அதிகரிப்பு 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
ஆனைமலை தாலுகாவில் பாதிப்பு அதிகரிப்பு 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
4. பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு- அதிகாரிகளுக்கு பாராட்டு
பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.
5. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 860 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் 860 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.