மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த பெறப்பட்ட முன்பணத்தை திருப்பி வழங்க அவகாசம் கொடுக்க வேண்டும்- அமைச்சரிடம், உரிமையாளர்கள் மனு
மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த பெறப்பட்ட முன்பணத்தை திருப்பி வழங்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்று, ஈரோடு மண்டப உரிமையாளர்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு
மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த பெறப்பட்ட முன்பணத்தை திருப்பி வழங்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்று, ஈரோடு மண்டப உரிமையாளர்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு கொடுத்தனர்.
முன்பணம்
கொரோனாவுக்கான முழு ஊரடங்கால் திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மண்டபம், வீடுகளில் நடந்தால், 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை. கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக பல மாதங்களுக்கு முன்பே, மண்டபங்களை பலர் பதிவு செய்துள்ளதாலும், கொரோனா வழிமுறைகளில் உள்ள சிக்கல்களால் சிலர், மண்டப நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.
இதுபோன்றவர்கள் கொடுத்த முன்பணத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், ‘மண்டப நிர்வாகிகள் பெற்ற தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அறிவித்தது.
கால அவகாசம்
இந்த நிலையில் ஈரோடு மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக நாங்கள் பெறும் முன்பணத்தை, அப்படியே டெபாசிட்டாக வைக்க இயலாது. பல மாதங்களுக்கு முன் அல்லது சில நாட்களுக்கு முன் முன்பணம் கொடுத்தாலும், மண்டபத்தை துாய்மை செய்தல், நிகழ்ச்சிக்கு ஏற்ப பல அமைப்பை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாங்களும் முன்பணம் கொடுத்துள்ளோம். சிலபொருட்கள் உடனடியாக கிடைக்காது. எங்களுக்கும் பல செலவு உள்ளது. அவற்றை எங்களால் திரும்ப பெற முடியாது. எனவே நாங்கள் பெற்ற முன்பணத்தை திருப்பி கொடுக்க கால அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story