அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு


அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு
x
தினத்தந்தி 29 May 2021 3:16 PM IST (Updated: 29 May 2021 3:16 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு ஒன்று திடீரென உள்ளே புகுந்தது. இதைப்பார்த்த நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த மாதம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு ஒன்று பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள், நோயாளிகளின், நர்சுகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story