குளிர்பான ஆலைக்கு சீல்
ஊரடங்கை மீறி செயல்பட்ட குளிர்பான ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி நகரில், ஊரடங்கை மீறி கடைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் திறக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆண்டிப்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது ஆண்டிப்பட்டி 9-வது வார்டு நாடார் தெருவில் உள்ள தனியார் குளிர்பான ஆலை, ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த ஆலையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குளிர்பான ஆலை உரிமையாளர் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----
Related Tags :
Next Story