கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கை வசதியுடன் தனி பிரிவு - அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்


கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கை வசதியுடன் தனி பிரிவு - அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2021 6:13 PM IST (Updated: 29 May 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கை வசதியுடன் தனி பிரிவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

சிக்கல்,

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் தாலுகா அளவில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு ஏற்படுத்தி வருகிறது.அதன்படி நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகளிடம் அனைத்து வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் நாகை கலெக்டர் பிரவின் நாயர், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், நாகை மாலிஎம்.எல்.ஏ., நாகை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், சுகாதார துறை அதிகாரிகள், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story