மணல்மேடு பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


மணல்மேடு பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 29 May 2021 7:36 PM IST (Updated: 29 May 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மணல்மேடு,

மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, உளுந்து, பயிறு, பருத்தி, நெல், சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் வகைகளை தங்கள் நிலங்களில் பயிர் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கோடை காலத்திற்கு முன்பாக இந்த பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடுவதை ஒரு சில விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதுகுறித்து இந்த பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், மார்ச் மாதம் தொடக்கத்தில் நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்னர் பார் அமைத்து ஒரு ஏக்கருக்கு 12 கிலோ மக்காச்சோள விதையை விதைக்க வேண்டும்.

7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நிலத்தின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும். அவ்வப்பொழுது பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து நன்கு பராமரித்தால் மக்காச்சோளம் நன்கு தரமானதாக இருக்கும். மகசூல் அதிகம் பெறலாம்.

மக்காச்சோளம் 75 முதல் 80 நாட்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கதிர் ஒன்று ரூ.4 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.20 முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது இருக்கும். அறுவடை செய்த பின்னர் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்றார்.

Next Story