நத்தம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
நத்தம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
நத்தம்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவரும் துவரங்குறிச்சி அருகே உள்ள வடகம்பட்டியை சேர்ந்த செல்வியும்(23) காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு நத்தம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து இருவரது பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் தற்போது ஊடரங்கு என்பதால் அவர்களால் போலீஸ்நிலையத்திற்கு வர இயலவில்லை. இந்தநிலையில் காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்களை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்..
Related Tags :
Next Story