கொடைக்கானல் பகுதியில் மேலும் ஒரு போலி டாக்டர் கைது


கொடைக்கானல் பகுதியில்  மேலும் ஒரு போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 29 May 2021 7:57 PM IST (Updated: 29 May 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் மேலும் ஒரு போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போலியாக சிலர் மருத்துவம் பார்ப்பதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பூம்பாறை கிராமத்தில் போலி மருத்துவம் பார்த்த மோகினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். 
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு போலி டாக்டர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று காலை கொடைக்கானல் குண்டுப்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு டாக்டருக்கு படிக்காமல் டென்சிங் (வயது 64) என்பவர் போலியாக மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஏராளமான மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ. சிவக்குமார் கூறுகையில், கொடைக்கானல் தாலுகா பகுதியில் போலியாக மருத்துவம் பார்ப்பவர்கள் இருந்தால் அது குறித்து வருவாய்த்துறைக்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார். 


Next Story